பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. முயற்சியில் இந்த அழைப்பு செளதி அரேபியா வழியாக வந்தது. ஒருபுறம், ஐ.எஸ்.ஐ. அமைப்பை சேர்ந்தவர்கள், அபிநந்தன் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்படுத்தியிருந்தார்கள். மறுபுறம், ஒருவர் அபிந்ந்தனின் மனைவியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். சிறைபிடிக்கப்பட்ட ஒரு நபர் இந்த பாணியில் நடத்தப்படுவதை "Good cop/ Bad cop" நடைமுறை என்று கூறுவார்கள்.
சிறையில் வைக்கப்பட்ட நபரிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெறும் நோக்கில் ஒருபுறம் நட்பாகவும், மறுபுறத்தில் மோசமாகவும் நடத்துவார்கள். அதே நாளன்று, அபிநந்தனை பாகிஸ்தானில் வைத்திருக்கும் விருப்பம் இல்லை என்றும் அவரை விடுவித்து விடுவதாகவும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். இந்த அறிவிப்பை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை தட்டி வரவேற்றார்கள். ஆனால் இது புத்திசாலித்தனமான முடிவா என்ற கேள்விகளும் பரவலாக எழுந்தன.